சொர்க்கம்! நம்மை பிரிந்தவர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரே வழி | Tamil Bayan - 753
நம்மை விட்டு பிரிந்தவர்களை மீண்டும் சந்திக்க சொர்க்கம் தான் சிறந்த இடம்
தலைப்பு : நம்மை விட்டு பிரிந்தவர்களை மீண்டும் சந்திக்க சொர்க்கம் தான் சிறந்த இடம்
வரிசை : 753
இடம் : சுபாங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 25-11-2022 | 25-11-1444
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71
அல்ஹம்துலில்லாஹ் மதிப்பிற்குரிய சகோதரர்களே! பெரியோர்களே! அல்லாஹ்வின் அருளால் இந்த நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கக்கூடிய ஒரு வாய்ப்பை அல்லாஹ் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா ஏற்படுத்திக் கொடுத்தான். அல்ஹம்துலில்லாஹ்!
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى
(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்.
(அல்குர்ஆன் : 87:10)
அல்லாஹு தஆலா உடைய உயர்வான கட்டளைகளில் ஒன்று நபியே நீங்கள் நினைவூட்டி கொண்டே இருங்கள். உபதேச செய்து கொண்டே இருங்கள். நினைவூட்டுதல் உபதேசம் செய்தல் கண்டிப்பாக எங்கு எல்லாம் பலன் அளிக்குமோ, அந்த இடங்களில் நீங்கள் உபதேசம் செய்யுங்கள். அல்லாஹ்வை பயப்பட கூடியவர்கள்,
மறுமையை பயப்பட கூடியவர்கள் அந்த உபதேசங்கள் மூலமாக நல் உணர்வு பெறுவார்கள், நல் அறிவு பெறுவார்கள். அல்லாஹுத்தஆலா உடைய முக்கியமான கட்டளைகளிலே ஒன்று முஃமின்களைப் பொறுத்தவரை அல்லாஹுத்தஆலா அவர்களுடைய தனிப்பட்ட அடையாளங்களில் ஒன்றாக சொல்லுகின்றான்.
وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
நம்பிக்கை கொண்ட ஆண்கள், இன்னும், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவார்கள். அவர்கள், நன்மையை ஏவுகிறார்கள்; இன்னும், தீமையை விட்டு தடுக்கிறார்கள்;.
அல்குர்ஆன் : 9:71)
முஃமின்கள் அவர்கள் ஆண்களாக இருக்கட்டும், பெண்களாக இருக்கட்டும் அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கு ஒருவர் வழி (guardian) பாதுகாவலர், பொறுப்பாளர், நண்பர்கள், தோழர்கள், பொறுப் பேற்கக் கூடியவர்கள் எனக்கும், பிறருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சமூக அக்கறை இல்லாதவர்கள் அல்ல மூமின்கள் மாறாக சமூக அக்கறை உடையவர்கள் மூமின்கள்.
அவர்களுடைய பணி எப்படியாக இருக்கும் அவர்கள் நன்மையை ஏவிக் கொண்டு இருப்பார்கள் இன்னும், தீமையை தடுத்துக் கொண்டே இருப்பார்கள். அந்த அடிப்படையில் அல்ஹம்துலில்லாஹ் நம்முடைய இந்த சந்திப்பும் அல்லாஹ்வைப் பற்றி நமக்கு நினைவூட்டக்கூடிய ஒரு சபையாக மறுமையை நினைவூட்ட கூடிய சபையாக, நன்மையை ஏவுவதற்குரிய வாய்ப்பாக,
தீமையிலிருந்து தடுப்பதற்குரிய ஒரு வாய்ப்பாக, சொர்க்கத்தின் மீது ஆசையை ஏற்படுத்தக்கூடிய ஒரு சபையாக, நரகத்தின் மீது நமக்கு பயத்தை ஏற்படுத்துவதற்குரிய ஒரு சபையாக, அல்லாஹுத்தஆலா ஆக்கி அருள வேண்டும் என்று, அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவனாக, இந்த நிகழ்வை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா நம்முடைய இந்த நிகழ்விலே பரக்கத் செய்வானாக! நாம் கேட்க கூடிய விஷயங்களை கொண்டு நம் உள்ளங்கள் மீது நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவானாக! ஆமீன்!
இன்றைய தலைப்பு உங்களுக்கு எல்லாம் தெரியும் சொர்க்கம் நம்மை விட்டுப் பிரிந்தவர்களை சந்திப்பதற்கான! ஒரு இல்லமாகும். சொர்க்கம் என்றாலே ஒரு சந்தோசம், ஒரு பூரிப்பு, காரணம் என்ன? அல்லாஹுத்தஆலா அதை புஸ்ரா தப்ஸீர் பசாரா நற்செய்தி சொல்லுங்கள்” நற்செய்தியைக் கேட்கும் பொழுது நமக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகை இன்று நாம் தொழக் கூடிய தொழுகை போன்று அல்ல. அது ஒரு ஆன்மீகமான, உணர்வு பூர்வமான தொழுகையாகும்.
إذا قام العبد يصلي ينادي ربه, إذا مر بآية رحمة سألها و إذا مر بآية عذاب إستعاذ منه
அவர்களே சொல்வது போன்று அடியான் தொழுகைக்கு நின்று விட்டால் அவன் தன் ரப்பிடத்திலே ரகசியமாக பேசுகிறான். ரப்பிடத்திலே பேசக்கூடிய ஒரு இபாதத்துதான் தொழுகை அந்த தொழுகையில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரஹ்மத்துடைய வசனங்கள், அதாவது சொர்க்கத்துடைய வசனங்களை ஓதினால் அல்லாஹுத்தஆலா அந்த சொர்க்கத்தை ஓதுவதை நிறுத்தி சொர்க்கத்திற்காக துஆ செய்வார்கள்.
அல்லாஹ்வுடைய தண்டனைகள் பற்றிய வசனங்கள் நரகத்தைப் பற்றிய வசனங்களை ஓதினால் நின்று அந்த இடத்திலே நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடிவிட்டு தான் அந்த ஆயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடந்து செல்வார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக், அவ்ஃப் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுமா , நூல : புகாரி, அபுதாவூத் எண் : 390, 873 ,குறிப்பு )1(
சகோதரர்களே! சொர்க்கம் என்பது ஒவ்வொரு முஃமினுடைய தேடல், ஆசை, லட்சியம் அங்கே செல்ல வேண்டும் என்று அவன் விரும்பக் கூடிய ஒரு இடம் அல்லாஹுத் தஆலா அந்த சொர்க்கத்தை எப்படி ஆக்கி வைத்திருக்கிறான் என்றால்,
خَيْرٌ مُسْتَقَرًّا وَأَحْسَنُ مَقِيلًا
சொர்க்கவாசிகள் அந்நாளில் தங்குமிடத்தால் மிக சிறந்தவர்கள்; இன்னும், ஓய்வெடுக்கும் இடத்தால் மிக சிறப்பானவர்கள் ஆவார்கள்.
(அல்குர்ஆன் : 25:24)
நாம் இந்த உலகத்திலே அனுபவித்த சிரமங்கள், வலிகள் இன்னும் என்னவெல்லாம் இந்த உலக வாழ்கையில் நமக்கு பிரச்சனை இருந்தனவோ அல்லது, இருக்கிறதோ இதெல்லாம் பிரச்சனைகளிலிருந்து நம்மை விடுவித்து உங்களுக்கு ஓய்வை அங்கு நான் தருகிறேன் (rest room, gest room) அல்லாஹ் சொல்கிறான்:
எப்படி நீங்கள் விருந்தாளியா அங்கு தங்குவதற்காக, நீங்கள் முழு ஓய்வு எடுப்பதற்காக ,மிக அழகாக, நிம்மதியாக, தூங்குவதற்காக உங்களுடைய (permanent address) லேயே சிறந்த address சொர்க்கம் தான் இங்கே கணக்கீடு கொள்ளலாம். நம்முடைய தற்காலிக இல்லம் நிரந்தர இல்லம் இல்லை. (permanent address temporary address)
என்னைப் பொருத்தவரை எல்லாமே temporary address தான், எல்லாமே தற்காலிக அட்ரஸ் தான் கொஞ்ச காலம் கூட, கொஞ்சம் காலம் குறைய அவ்வளவு தான். மற்றபடி இந்த உலகமே தற்காலிகமான ஒரு உலகமாக தான் அல்லாஹுத்தஆலா நமக்கு ஆக்கி வைத்திருக்கிறான். நிரந்தரத்தை இந்த உலகத்தில் அல்லாஹுத்தஆலா யாருக்கும் கொடுக்கவில்லை.
وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ اَفَا۟ٮِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ
சொர்க்கவாசிகள் அந்நாளில் தங்குமிடத்தால் மிக சிறந்தவர்கள்; இன்னும், ஓய்வெடுக்கும் இடத்தால் மிக சிறப்பானவர்கள் ஆவார்கள்.
(அல்குர்ஆன் : 25:24)
அல்லாஹ் கேட்கிறான்! நபியே உங்களுக்கு முன்னால் இந்த பூமியிலே நிரந்தரமாக வாழக் கூடிய வாழ்க்கை யாருக்கும் கொடுக்கவில்லை. நீங்கள் இறந்து விட்டால் இவர்கள் மட்டும் என்ன, நிரந்தரமாக இந்த பூமியிலே இருந்து விடுவார்களா, நம்மிடம் திரும்ப வர மாட்டார்களா,
وَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ كُلٌّ إِلَيْنَا رَاجِعُون
இன்னும், அவர்கள் தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் (பல பிரிவுகளாக) பிரிந்து விட்டனர். (அவர்கள்) எல்லோரும் நம்மிடமே திரும்புவார்கள்.
(அல்குர்ஆன் : 21:93)
அங்கே இவர்களுடைய கணக்கை தீர்ப்போம். முடிப்போம் என்று அல்லாஹுத்தஆலா சொல்கிறான். இந்த தற்காலிகமான இந்த உலகத்திலேயே முஃமின்களுக்கு அல்லாஹ் சுபஹானல்லாஹ் கொடுத்து இருக்கக் கூடிய அந்த பொறுப்பு என்ன? கட்டளை என்ன? கடமை என்ன? நீங்கள் மறுமைக்காக அமல் செய்து வாருங்கள்.
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள்:
اليوم عمل وغدا حساب
இன்றைய அமல் நாளை விசாரணை. அங்கு அமல் இல்லை இங்கே விசாரணை இல்லை. இங்கே ஒருவன் பாவம் செய்தால் நீ ஏன் பாவம் செய்தாய் என்று விசாரிக்கப்படாது. நன்மை செய்தவருக்கு இங்கே உடனடியாக கூலி கொடுக்கப்படாது.
விசாரணை மறுமையிலே இருக்கிறது. கண்டிப்பாக மறுமை வந்தே தீரும், மறுமையின் யக்கீனை நம்முடைய உள்ளத்தில் ஆழமாக கொண்டு வரவேண்டும். நாம் தொன்று தொட்டு வாழையடி வாழையாக மறுமையைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம் அல்லது, கேட்கிறோம்.
கேட்ட இந்த உண்மைகள், எந்த அளவு நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலே இறங்கி இருக்கின்றன, எந்த அளவு நம்முடைய உள்ளத்தை மாற்றி இருக்கிறது.
அந்த நம்பிக்கை நம்முடைய அமல்களை எப்படி உருவாக்குகிறது, அந்த நம்பிக்கை நம்முடைய குணத்தை எப்படி மாற்றி இருக்கிறது, நம்முடைய வியாபாரத்தை எப்படி மாற்றி இருக்கிறது, அப்படி மாற்றி இருந்தால், அதுதான் நம்பிக்கை அது உள்ளத்தின் ஆழத்திலே பதிந்த யக்கீன்.
அப்படி இல்லை என்றால் நாம் கேட்டது ஒரு செய்தியாக தான் நம்முடைய உள்ளத்திலே அறிவிலே இருக்குமே தவிர, ஈமானாக யக்கீனாக ஆகாது. ஹசன் பசரி ரஹிமஹுல்லாஹ் அவர் மிகப்பெரிய முஹத்திஸ் தாபியீன்களுடைய தலைவர், சஹாபாக்களின் மாணவர், ஞானத்தின் ஊற்று அவர்கள் என்ன சொல்வார்கள்:
عن الحسن البصري أنه ليس الإيمان بالتمني ولا بالتحلي ولكن هو ما وقر في القلب
ஈமான் என்பது ஆசை வைபதைக்கொண்டோ மட்டும் நிறைவேறகூடியது அல்ல (ஈமான் என்பது பேச்சில் இல்லை, ஈமான் என்பது நாம் அணிகின்ற ஆடை அணி கலன்களில் இல்லை, நாம் அப்படித்தான் ஆக்கி வைத்திருக்கிறோம்.) ஒருவருடைய பேச்சைப் பார்த்து முஃமின் என்று நம்பிவிடுகிறோம். ஒருவருடைய ஆடையை பார்த்து அவரை முஃமின் என்று நம்பி விடுகிறோம் ஈமான் என்றால் என்ன? உள்ளத்திலே படிந்து விட்ட, ஆழமாக ஊறிவிட்ட, ஆழமாக உறுதியாகி விட்டது எதுவோ அதுதான் ஈமான்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்திலே கிராம ஆரபி, கூட்டம் கூட்டமாக வந்து சொன்னார்கள்.
وقالت الأعراب آمنا
நபியே நாங்கள் எல்லாம் மூமின்கள் நபியே நாங்கள், எல்லாம் முஃமின்கள் சொல்லி சில நொடிகளிலே அல்லாஹுத் தஆலா வசனத்தை இறக்கிறான்.
قُلْ لَّمْ تُؤْمِنُوْا وَلٰـكِنْ قُوْلُوْۤا اَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْاِيْمَانُ فِىْ قُلُوْبِكُمْ
கிராமப்புற அரபிகள், “நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை.” என்றாலும் “நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கிறோம்” என்று கூறுங்கள்!
(அல்குர்ஆன்: 49:14)
நபியே நீங்கள் சொல்லுங்கள். நீங்கள் முஸ்லிமாக இப்போது மாறி இருக்கிறீர்கள். இஸ்லாமை ஏற்று இருக்கிறீர்கள். இன்னும் உங்களுடைய உள்ளங்களில் ஈமான் நுழையவில்லை. அப்போ நம்முடைய உள்ளம் ஒரு வீடு என்றால் அதிலே ஈமான் நுழைய வேண்டும்.
நுழைந்த ஈமான் வெளியேறாமல் தங்கி இருக்க வேண்டும். அது இன்னும் ஆழமாக சென்று கொண்டே இருக்க வேண்டும். யார் அந்த பாக்கியத்தை பெற்றவர்கள்?
நுழைந்ததற்குப் பிறகு அந்த ஈமான் தங்க வேண்டும். இன்னும் டீப்பாக உள்ளத்தில் ஆழத்திலே இறங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த ஆழத்தை கண்டு பிடிக்கவே முடியாது. மரணம் வரைக்கும் அது இறங்கிக் கொண்டே இருக்கணும். யார் அவர்கள்? அதையும் அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَة اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!”
(அல்குர்ஆன் : 41:30)
யார்? எங்களுடைய ரப்பு அல்லாஹ் எங்களுடைய மாபூது அல்லாஹ், நாங்கள் அல்லாஹ்வை வணங்குவோம். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவனாக யாரையும் எடுத்துக் கொள்ள மாட்டோம் எங்களுடைய வணக்க வழிபாடுகள்,
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
நிச்சயமாக நான், - என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டி இருக்கிறான். அது (இவ்வுலக, மறு உலக வாழ்க்கையின் தேவைகளை உள்ளடக்கிய) நிலையான உறுதியான மார்க்கமாகும், இப்ராஹீம் உடைய கொள்கையாகும். (அவர் இஸ்லாமிய மார்க்கத்தில், ஓர் இறையை வணங்குவதில்) மிக உறுதியுடையவர். அவர் இணைவைப்பவர்களில் (ஒருபோதும்) இருக்கவில்லை” என்று (நபியே!) கூறுவீராக. (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் தொழுகையும், என் பலியும் (எனது வணக்க வழிபாடுகளும்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை.”
(அல்குர்ஆன் : 6: 161,162)
அந்த யக்கீனோடு தவ்ஹீதோடு அல்லாஹ்வை பரிசுத்தமாக கலப்பற்ற முறையிலே, கலப்பற்ற முறையிலே பரிசுத்தமாக வணக்க வழிபாடுகளை செய்வது அத்தகைய வணக்க வழிபாடுகளில்,
ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!”
(அல்குர்ஆன் : 41:30)
அதிலே அவர்கள் உறுதியாக இருப்பார்கள், அல்லாஹ்வுடைய கட்டளையை பெற அடுத்தது அதை எப்படி அமல்படுத்துவது என்பது தான் அவர்களுடைய கவலையாக இருக்கும். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவை கேட்டவுடன், அதை வாழ்க்கையில் கொண்டு வருவது தான் அவர்களுடைய குறிக்கோளாக இருக்குமே தவிர வேறொன்றும் இருக்காது.
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ
(அல்குர்ஆன் : 41:30)
அரபியிலே இந்த இஸ்திகாமா என்பது விசாலமான பொருள் உடையது. நிலையாக உறுதியாக இருப்பது, நடு பாதையிலே உறுதியாக இருப்பது, பற்றி பிடிப்பது, தொடர்ந்து அதிலே பயணித்துக் கொண்டே இருப்பது. இன்று நம்மை பொருத்தவரை எப்படி நாம் நம்முடைய மார்க்கத்தில் ஒரு லிமிட், ஒரு அளவை வைத்துக் கொண்டோம். எனக்கு இந்த அளவு இபாதத் போதும், ஹலால் ஹராம் சட்டத்திலே எனக்கு இந்த அளவுக்கு போதும,. வியாபாரத்தில் எனக்கு இஸ்லாம் இந்த அளவு போதும், சில பேர் இதில் ரொம்பவும் அத்துமீறி போய் வீட்டிலேயோ, கடையிலேயோ இரண்டு வசனத்தை மாட்டி வைத்தாலே இஸ்லாம் எனக்கு போதும், இதுக்கு மேல் வியாபாரத்தில் வாக்கை பேணுவதோ, நேர்மையை பேணுவதோ, மற்ற மற்ற வியாபாரத்தின் உடைய சட்டங்களை பேணுவதோ இது எல்லாம் ஒன்றும் இருக்காது. கடையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம், அஸ்ஸலாமு அலைக்கும், லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் அல்லது ஹாதாமின் ஃபழ்லி ரப்பி ஏதாவது போர்டோட நிறுத்திருப்பார்கள்.
வீட்டில் இஸ்லாம் வாசலில் போர்டு வைத்துவிட்டு அதோடையே இஸ்லாமை நிறுத்திக் கொள்வார்கள். வீட்டிற்குள் இஸ்லாம் இருக்காது. வீட்டிற்குள் இஸ்லாம் இருக்குமே ஆனால்,அது மடித்து வைக்கப்பட்ட குர்ஆனிலே இருக்கும். எடுத்து வைக்கப்பட்ட ஹதீஸ் புத்தகங்களிலே இருக்குமே தவிர வாழ்க்கையைப் பார்த்து அவர்களிடத்தில் இருந்து ஏதாவது இஸ்லாமிய அடையாளங்களை அறிய முடியுமா என்றால், முடியாது அல்லாஹ் பாதுகாப்பானாக!
اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ
(அல்குர்ஆன் : 41:30)
இத்தகைய மக்கள் அவர்களுடைய மரணத்தருவாயிலே, மலக்குகள் அவர்கள் மீது இறங்குவார்கள். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா மறைவாக இருக்ககூடிய அந்த திரையை எடுத்து விடுவான். கர்கரா உடைய தொண்டை குளிக்கு அந்த ரூஹ் வரும் பொழுது அந்த மறைவுக்கு அல்லாஹுத்தஆலா மறைக்கப்பட்ட அந்த திரையை, அல்லாஹுத்தஆலா எடுத்து விடுவான். எடுத்ததற்குப் பிறகு மறைவான அந்த உலகம், மறைக்கப்பட்ட அந்த உலகம் அவனுக்கு தெரிய ஆரம்பிக்கும், மலக்குகள் பேசுவதை கேட்பார்கள்.
تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلٰٓٮِٕكَةُ
(அல்குர்ஆன்:41:30)
மலக்குகள் என்ன சொல்வார்கள் மூன்று செய்திகளை சொல்வார்.
اَلَّا تَخَافُوْا
முதலாவது நீங்கள் பயப்பட வேண்டாம் எனவே, அதிலிருந்து என்ன தெரிகிறது மௌத் வரை நாம் பயந்து கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. யார் மௌத் வரை பயந்து கொண்டிருப்பார்களோ, மௌத்திற்கு பிறகு பயப்படவே மாட்டார்கள். ஹசன் பசரி ரஹிமுஹல்லா சொல்கிறார்கள்.
துன்யா முஃமீன்கள் பயந்துகொண்டு இருந்த இடம் அப்படி பயந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு மறுமை அவர்களுக்கு பயமே இல்லாத இடமாகும். சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் அவர்கள் பேசிக் கொள்ளக்கூடிய பேச்சுகளை அல்லாஹ் குர்ஆனிலே பல இடங்களிலே சொல்லுகிறான். அதிலே சூரா தூர் உடைய முக்கியமான வசனம் அந்த வசனம் தான் நம்முடைய இன்றைய அமர்வின் தலைப்பும் கூட. அது மிக முக்கிய வசனமாகும் அந்த சொர்க்கத்துடைய அத்தூருடைய வசனத்தை ரப்பு சொல்லும் போது, சொர்க்க வாசிகள் தங்களுக்கு மத்தியில் பேசிக்கொள்ளும் போது சொல்லுவார்கள்,
قَالُـوْۤا اِنَّا كُـنَّا قَبْلُ فِىْۤ اَهْلِنَا مُشْفِقِيْنَ مَنَّ اللّٰهُ عَلَيْنَا وَوَقٰٮنَا عَذَابَ السَّمُوْمِ
(அப்போது) அவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னர் (உலகத்தில் வாழ்ந்தபோது) எங்கள் குடும்பங்களில் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்தவர்களாகவே இருந்தோம். ஆக, அல்லாஹ் எங்கள் மீது உபகாரம் புரிந்தான். இன்னும், எங்களை நரகத்தின் தண்டனையை விட்டும் பாதுகாத்தான்.
(அல்குர்ஆன் : 52:26, : 52:27)
நாங்கள் உலகத்திலேயே எங்களுக்கு குடும்பங்களின் மத்தியிலே இருக்கும் பொழுது, எங்கள் குடும்பத்தோடு நாங்கள் வாழும் போது நாங்கள் பயந்து கொண்டிருந்தோம். நாங்கள் அதிகம் பயந்துகொண்டிருந்தோம் என்ன நடக்குமோ, எங்களுக்கு முடிவு எப்படி ஆகுமோ, கபுருடைய வாழ்க்கை எப்படி இருக்குமோ என்று மறுமையை குறித்த பயத்திலே இருந்தோம்.
அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்தான். அல்லாஹுத்தஆலா எங்கள் மீது அருள் புரிந்தான்.விஷம் நிறைந்த இந்த நரக நெருப்பின் தண்டனையிலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாத்தான். ஆகவே இந்த துன்யாவில் இருக்கும்போது நாம் அல்லாஹ்வுடைய பயத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய அஹ்லுஸ்ஸுன்னா உடைய மார்க்க அறிஞர்கள் என்ன? சொன்னார்கள். الإيمان بين الخوف والرجاءஈமான் என்பது பயத்துக்கும், நல்ல ஆதரவுக்கும் இடையே இருக்க வேண்டும்.
ஈமான் என்பது பயத்திற்கும் ,நல்ல ஆசைக்கும் இடையில் இருக்க வேண்டும். முஹம்மது ரஹிமஹுல்லாஹ் சொல்லுகிறார்கள். அதாவது ஒரு முஃமினை பொருத்தவரை அவருடைய வாழ்நாளிலே அவனுடைய பயம் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
மௌத்துடைய நேரம் நெருங்க நெருங்க அவனுக்கு அல்லாஹ்வுடைய ஆதரவு அதிகமாகிவிட வேண்டும். அல்லாஹ்வின் மீது ஆசை அதிகமாகிவிட வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஒருவரை பயந்தால் அவரது அருகில் செல்வதற்கு நீங்கள் பயந்து விடுவீர்கள்.
நீங்கள் ஒருவரை நேசித்தால், ஆசைப்பட்டால் அவருக்கு அருகில் செல்வதற்கு நீங்கள் விரும்புவீர்கள். நாம் இந்த நேரத்திலே பயத்தை அதிகரித் திருக்க வேண்டும். நம்முடைய சக்கராத்து நேரம் நம்முடைய வாழ்க்கையின் இறுதி மௌத்துடைய (ஃபிராஸ்) விளிம்பிலே படுத்துவிட்டால் அப்போது நமக்கு ஆசையை அதிகப்படுத்த வேண்டும்.
அந்த ஆசைதான் அல்லாஹ்வை சந்திப்பதற்கு நம்மை தூண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஹதீஸிலே சொல்கிறார்கள்.
من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه
அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6507 குறிப்பு:2
அடியான் அல்லாஹ்வை சந்திக்க விரும்பினால் அல்லாஹ்வும் அந்த அடியானை சந்திக்க விரும்புகிறான். அடியான் அல்லாஹ்வுடைய சந்திப்பை வெறுத்தால் அல்லாஹ்வும் தன்னுடைய சந்திப்பை வெறுத்து விடுகிறான். நம்முடைய தாய் ஆயிஷா ரலி யல்லாஹுஅன்ஹா இருக்கிறார்களே ரொம்ப புத்தி கூர்மையானவர். ரொம்ப பெரிய புத்தி சாலியான பெண்மணி ரொம்ப நுணுக்கமாக கேள்வி கேட்பார்கள்.
அறிவிப்பாளர் : உபாதா இப்னு ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6507
யா! ரசூலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன நீங்கள் எங்களிலே யார் மௌவ்த்தை விரும்புவார்? என்ன கேட்கிறார்கள். எங்களில் எல்லாருமே மௌத்தை வெறுப்பவர்கள் தானே, மனிதர்கள் என்றாலே அப்படி என்றால் நீங்கள் சொல்லக்கூடிய இந்த ஹதீஸை எப்படி நாங்கள் எடுத்துக் கொள்வது அல்லாஹ்வை சந்திப்பது என்றால் மௌத் இல்லாமல் முடியாது.
அப்ப நீங்கள் மௌத்தை விரும்ப சொல் கிறீர்களா, இயற்கையாக விரும்ப மாட்டாங்களே அப்போ நாங்கள் என்ன செய்வது, அல்லாஹ் எங்களை சந்திக்க விரும்பலையா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், ஆயிஷா நான் அதை சொல்ல வில்லை.
ஒரு அடியான் வாழ்க்கையின் இறுதிக்கு வந்து விடும்போது, மரணத்தின் அறிகுறிகளை கண்டுவிடும் போது, அந்த நேரத்தில் அவன் துடிக்கவேண்டும். என்னுடைய ரப்பை சந்திக்க வேண்டும் என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்: அல்லாஹுத் தஆலா ஒரு அடியானுக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்தான்.
துன்யாவில் தங்குவதையும், மறுமையும் நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று, இரண்டு வாய்ப்புகளை கொடுத்தான். அந்த அடியான் மறுமையை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இதைக் கேட்டவுடன் எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். அபூபக்கர் ரலி யல்லாஹு அன்ஹு மட்டும் அழுகிறார்கள். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யாரை நாடினார்கள்? தங்களை நாடிச் சொன்னார்கள். அந்த இறுதி மௌத்திலே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யா! அல்லாஹ் உயர்ந்த அந்த நண்பர்களிடத்திலே என்னை சேர்த்து விடு. அல்லாஹ்விடத்தில் கேட்கிறார்கள்.
பிறகு அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு மௌத்தில் இருக்கிறார்கள். அப்போது சஹாபாக்கள் டாக்டரை கொண்டு வரட்டுமா, அந்த மருத்துவரை கொண்டு வரட்டுமா ,உங்களுக்கு நாங்கள் சிகிச்சை செய்கிறோம் என்பதாக, என்னை என் மருத்துவன் பார்த்து விட்டான். அந்த மருத்துவன் தான் எனக்கு இதையே கொடுத்திருக்கிறான். நான் அவனை சந்திப்பதை விரும்புகிறேன். யாரை மனதில் வைத்து சொல்கிறார்கள்.
அல்லாஹ் சுபஹானல்லாஹ்வை. சொல்கிறார்கள், இந்த மலக்குகள் அந்த நேரத்திலே இறங்கும்போது என்ன சொல்வார்கள். اَلَّا تَخَافُوْا பயப்படாதீர்கள் இந்த துன்யாவில் இருப்பது வரைக்கும் நாம் பயந்து கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் உடைய எல்லை வரும்பொழுது, நம்முடைய ஆசை அதிகரித்து விட வேண்டும்.
اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْ
(அல்குர்ஆன்:41:30)
கவலைப்படாதீர்கள். அது என்ன கவலைப்படாதீர்கள் என்றால் பொதுவாகவே நம்முடைய சந்ததிகளை பற்றி கவலை இருக்கும். மலக்குகள் சொல்வார்கள் உங்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய சந்ததிகளை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் அல்லாஹ் அவர்களை பொறுப் பேற்றுக் கொள்வான்.
இந்த இடத்திலே ஒரு சில முக்கியமான விஷயங்களை நாம் புரிய வேண்டும்” அது என்ன இன்று பெரும்பாலும் நம்மை பொருத்த வரை நம்முடைய சந்ததியினருக்கு தரமான வாழ்க்கையை கொடுப்பதற்கும், வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அதிகமான பொருளாதரத்தை அவர்களுக்கு தேடிவிட்டு செல்வதற்கும் நாம் கவனமாக இருக்கிறோம்.
எந்த அளவுக்கு என்றால் செல்வத்தை சேகரித்து நாம் அனுபவிப்பதை விட செல்வத்தைக் கொண்டு நம்முடைய பிள்ளைகளுக்கு வேண்டும் என்று விட்டு வைக்கக் கூடியவர்களாக, பாதுகாத்து தரக்கூடியவர்களாக, நாம் இருக்கிறோம். ஒன்றை மட்டும் எழுதி ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் சேகரித்த செல்வம் அல்லாஹ் பரக்கத் செய்யப்பட்ட செல்வமாக இருந்தால் தான் முதல் நிபந்தனை, இரண்டாவது அந்த சந்ததிகள் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்ட முஃமினும் அல்லாஹ்விற்கும், ரசூலுக்கும் கீழ்ப்படிந்த முஃமின்களாக இருந்தால் தான் உங்களுடைய செல்வத்தைக் கொண்டு அவர்கள் ஹலாலான முறையிலே பயன் பெறுவார்கள்.
அந்த செல்வம் அவர்களுக்கு பரக்கத்தான செல்வமாக இருக்கும். அப்படி இல்லை என்றால், அந்த செல்வம் அவர் களுக்கு ஃபித்னாவாக ஆகிவிடும். அந்த செல்வம் அவர்கள் மார்க்கத்தை மீறுவதற்கு காரணமாக ஆகிவிடும். அந்த செல்வம் அவர்கள் மார்க்கத்தை மீறுவதற்கு காரணமாக, சோதனையாக, அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் செய்து கொண்டு ஒருவரோடு ஒருவர் பகைவர்களாக மாறிவிடுவதற்கு காரணமாக அமையும்.
ஆகவே, நமக்கு மார்க்கம் என்ன சொல்கிறது? நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு உலக செல்வத்தை கொடுப்பதற்கு முன்னால், அவர்களுக்கு ஈமானையும், தக்குவாவையும் கொடுக்க வேண்டும், ஈமானையும், தக்குவாவையும், இறையச்சத்தையும், மார்க்கப்பற்றையும் கொடுக்க வேண்டும், இஸ்லாம் என்று சொன்னால் உடனே ஒரு ஆசை, பாசம், பிரியம், ஒரு பற்று வர வேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான் என்றால் உடனே உள்ளம் எழுந்திருக்க வேண்டும், காது செவி சாய்க்க வேண்டும், கல்பு அதை உள்வாங்க வேண்டும், உறுப்புகள் அதை அமல்படுத்த துடிக்க வேண்டும், அத்தகைய தன்மையை நாம் அவர்களுக்கு கொடுத்து வளர்க்க வேண்டும்.
உங்களுக்கு தெரியும் நம்முடைய ஹலிபாக்களில் ஐந்தாவது ஹலிஃபா என்று ஒருவரைப் பற்றி புகழப்படும். யார் அவர்கள் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய வாரிசுகளில் வரக்கூடியவர்.
அதைப் போன்று உவமியா மன்னர்களில் ஹிசாம் இப்னு அப்துல் மலிக் என்று ஒரு பெரிய மன்னர் வரலாற்று ஆசிரியர்கள் என்ன? எழுதுகின்றார்கள் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் கிலாபத்தை ஏற்ற உடனேயே ஏற்கனவே இருந்த உவமியா மன்னர்கள், உவமியா செல்வங்களை எல்லாம் பைத்துல் மாலிலே கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.
உங்களுடைய சம்பளங்களை தவிர சொத்துக்கள் எல்லாம் நீங்கள் அநியாயமாக சேர்த்த சொத்துக்கள் இதெல்லாம் வன பைத்துல் மாலுக்கு சேர வேண்டியவையாகும். சேர்த்து விட்டார்கள். அவர்களுடைய மனைவியை இதற்கு முன்னால் மன்னராக இருந்த தனது சாச்சா உடைய மகள் அவ்வளவு நகைகளோடு வருகிறார்கள். உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத் துல்லாஹி அலைஹி அந்த முதல் இரவிலே ஒரு பெரிய ஒரு பெட்ஷீட் மாதிரியான ஒரு துணியை விரித்து விட்டு சொல்கிறார்கள்.
நான் வேண்டுமா, இந்த நகை வேண்டுமா என்று, மனைவிக்கு கேள்வி புரியவில்லை. என்ன சொல்ல வருகிறீர்கள். நீ என்னை தேர்ந்தெடுத்தால் இந்த நகைகளை எல்லாம் இந்த விரிப்பிலே போட்டு விடு. நான் பைத்துல் மாலிலே சேர்த்து விடுகிறேன்.
இல்லை இந்த நகை வேண்டுமென்றால் இப்போதே உன்னை விடுதலை செய்து விடுகிறேன். மனைவி உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படியே போட்டிருந்த மொத்த நகையையும் அந்தப் போர்வையில் போட்டு சுருட்டி கொண்டு போய் பைத்துல் மாலிலே கொடுத்துவிட்டு வந்து விடுகிறார். உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு இறக்கும்போது நிறைய பிள்ளைகள் அவர்களுக்கு ஏறக்குறைய ஏழு பிள்ளைகள் (near) ஒரு சொத்து கூட இல்லை.
அப்போது சிலர் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்திலே கேட்கிறார்கள். இவ்வளவு காலம் மன்னராக இருந்து நீங்கள் இறக்கிறீர், பங்கு போடுவதற்கு எந்த சொத்தும் இல்லாமல் இறக்கிறீர், உம்முடைய பிள்ளைகளுக்கு எதையுமே நீங்கள் விட்டுச் செல்லவில்லையே ஏன் இப்படி என்று கேட்கிறார்கள். சூரத்துல் அஃராஃப் உடைய அந்த இறுதி வசனத்தை ஓதுகின்றார்கள்.
إِنَّ وَلِيِّيَ اللَّهُ الَّذِي نَزَّلَ الْكِتَابَ وَهُوَ يَتَوَلَّى الصَّالِحِينَ
“நிச்சயமாக என் பாதுகாவலன் (இந்த) வேதத்தை இறக்கிய அல்லாஹ்தான். இன்னும், அவன் நல்லவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் : 7:196)
என்னுடைய வழி அல்லாஹ்வாக இருக்கிறான். என்னுடைய பாதுகாவலன் அல்லாஹ்வாக இருக்கிறான். நல்லவர்களை அவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான். அவன் அவர்களுக்கு guardian ஆக இருந்து அவர்களைக் காப்பாற்றுவான் என்று சொல்லிக் கொண்டு, என்னுடைய பிள்ளைகள் நல்லவர்களாக இருப்பாரே ஆனால் அல்லாஹ் அவர்களுடைய வழியாக, அல்லாஹ் அவர்களை காப்பாற்ற கூடியவனாக இருக்கிறான்.
அப்படி அவர்கள் நல்லவர்களாக இல்லை என்றால் அவர்களைப் பற்றி நான் கவலைப்பட அவசியம் இல்லை இப்படி ஒரு தந்தை. மன்னர் ஹிசாம் இப்னு அப்துல் மலிக் அவரும் இஸ்லாமிய மன்னர்களில் ஒருவர் தான், அவர் இறக்கும்போது அவருடைய பிள்ளைகள் எல்லாம் ஒவ்வொரு நாட்டினுடைய கவர்னராக இருக்கின்றார்கள்.
செல்வம், சொத்து அவ்வளவு ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் ஹிஸாமுன் அப்துல் மலிக் அவர்கள் இறந்ததற்கு பிறகு, அவருடைய பிள்ளைகளும் அவருடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அடுத்து ஏழைகளாக பக்கீர்களாக ஆகிறார்கள்.
அனைத்து வசதிகளையும் இழக்கிறார்கள். இங்கே உமர் இப்னுஅப்துல்அஜீஸ் ரஹிமஹுமுல்லாஹ் அவருடைய பிள்ளைகளோ ஒவ்வொரு பிள்ளையும் அல்லாஹ்வின் பாதையிலே போருக்கு செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான முஜாய்துகளுக்கு முழு வசதிகளை செய்து கொடுக்கும் அளவிற்கு செல்வந்தர்களாக ஆகிறார்கள்.
ஆகவே அல்லாஹ் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அந்த மலக்கு களுக்கு கொடுக்கக்கூடிய அந்த கட்டளைகளிலே ஒன்று, அந்த மலக்குகள் முஃமின்களை பார்த்து சொல்வார்கள்.
وَلَا تَحْزَنُوْا
(அல்குர்ஆன்:41:30)
நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் பிள்ளைகளை அல்லாஹ் பார்த்துக் கொள்வான். சூரத்துல் கஹ்ஃப் உடைய ஒரு சம்பவம் உங்களுக்கு தெரியும். ஒரு சுவரை மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹிளர் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் சரி செய்கிறார்கள்.
சரி செய்யும் போது ஏற்கனவே அந்த ஊர் காரர்கள் சாப்பாடு கொடுத்திருக்க மாட்டார்கள். மூசா அலைஹிஸ்ஸலாம் ரொம்ப கோபத்தில் இருப்பார்கள். ஹிள்ர் இதுக்கு நீங்க கூலி வாங்கி இருக்கலாமே! ஏன் இப்படி செய்து விட்டீர்கள்.
சாப்பாடு கூட கொடுக்கல இந்த ஊர்காரர்கள். அதுக்கு கூழியும் வாங்காமல் இந்த மாதிரி செய்றீங்களே. அந்த மாதிரி சொல்லிட்டு அதுக்கு விளக்கம் பின்னாடி ஹிதர் அலைஹிஸ்ஸலாம் சொல்லும் பொழுது,
وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا فَأَرَادَ رَبُّكَ أَنْ يَبْلُغَا أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنْزَهُمَا رَحْمَةً مِنْ رَبِّكَ وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِي ذَلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِعْ عَلَيْهِ صَبْرًا
ஆக, (அந்தச்) சுவரோ (அந்த) நகரத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியதாக இருந்தது. இன்னும், அதற்குக் கீழ் அவ்விருவருக்குரிய புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை (மிக) நல்லவராக இருந்தார். ஆகவே, அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்து, தங்கள் புதையலை வெளியே எடுக்க வேண்டும் என்பதை உம் இறைவன் நாடினான். (எனவே, நான் அந்தச் சுவரைச் செப்பனிட்டேன். இது,) உம் இறைவனின் அருளினால் (செய்யப்பட்டது). (மேற்படி நிகழ்ந்த) இவற்றை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. நீர் பொறுமையாக இருப்பதற்கு இயலாதவற்றின் விளக்கம் இதுதான்.
(அல்குர்ஆன் : 18:82)
இந்த சுவரை அல்லாஹ் எனக்கு கட்டளையிட்டான் அல்லாஹ் நாடினான் இதை சரி செய்ய வேண்டும் என்று, ஏனென்றால் இதற்கு கீழே புதையல் இருக்கிறது. யாருக்கு உரிய புதையல் இரண்டு எத்தீமான பிள்ளைகளுக்கு உரிய புதையல்.
அந்த இரண்டு எத்தீம்களுடைய தந்தை சாலிகா நல்லவராக இருந்தார் நாம் செல்வந்தராக இருப்பதால் நம்முடைய பிள்ளைகள் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நினைப்பது தவறு, நிஃமத்தான வாழ்க்கையை வாழ்வார்கள் என்று நினைப்பது தவறு, நாம் தக்வா உள்ள சாலிஹீன்களாக இருந்தால், அல்லாஹுத்தஆலா அவர்களை வாழ வைப்பான். மலக்கு சொல்வார்கள் நீங்கள் கவலைப்படாதீர்கள். மூன்றாவது செய்தி,
وَلَا تَحْزَنُوْا
(அல்குர்ஆன்:41:30)
وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!”
(அல்குர்ஆன்:41:30)
எதற்காக வேண்டி ஒரு முஃமின் இந்த உலகத்தில் வாழ்கிறானோ காஃபீர்கள் எல்லாம் அவர்களுடைய சுகமான வாழ்க்கையிலே வாழ்கிறார்கள். வணக்க வழிபாடு இல்லை, சட்ட வரம்புகள் இல்லை, இப்படித்தான் என்ற கட்டுப்பாடுகள் அவர்களிடத்தில் இல்லை, இப்படி இருக்கும்போது அவர்களுக்கு பக்கத்திலேயே அவர்களது தெருவிலேயே வாழ்கிற ஒரு முஃமின்,
اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا
நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.
(அல்குர்ஆன் : 4:103)
அல்லாஹு அக்பர் என்ற அதானை கேட்டுவிட்டு அவன் மஸ்ஜிதுக்கு செல்கிறான், ரமலான் உடைய நோன்பு மாதம் வந்தவுடன் அவன் நோன்பு நோற்கிறான், இப்படியாக தன்னுடைய உடலையும், பொருளையும் அல்லாஹ்வுடைய திருப்தியை நாடி அவன் செலவழித்துக் கொண்டே இருக்கிறான், தன்னை அவன் வறுத்திக் கொண்டு இருக்கிறான், சுபஹானல்லாஹ்! இப்படிப்பட்ட முஃமினுக்கு அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா அங்கே நற்செய்தி சொல்ல சொல்லுகிறான்.
وَاَبْشِرُوْا بِالْجَـنَّةِ الَّتِىْ كُنْتُمْ تُوْعَدُوْنَ
நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!”
(அல்குர்ஆன்:41:30)
நீங்கள் எந்த சொர்க்கத்தை இந்த உலகத்தில் இருக்கும் பொழுது வாக்களிக்கப் பட்டுக் கொண்டிருந்தீர்களோ, அந்த சொர்க்கத்தின் உடைய நற்செய்தியை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். அப்போ முஃமின் இந்த உலகத்திலிருந்து இறக்கும் போதே அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா அவருடைய சொர்க்கம் அவருக்கு காண்பிக்கப்படுகிறது. சொர்கத்துடைய நற்செய்தி அவருக்கு கொடுக்கப்படுகிறது.
அதனுடைய தொடக்கம் இங்கே இன்னொரு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இன்று சொர்க்கத்தை பற்றி பேசுவதும், நரகத்தைப் பற்றி பேசுவதும், மறுமையைப் பற்றி பேசுவதும் மிக மிக குறைந்து விட்டது, பயான்களிலும் குறைந்துவிட்டது, நம்முடைய தனிப்பட்ட அமர்வுகளிலும் குறைந்துவிட்டது, சொர்க்கத்தைப் பற்றி நாம் தனிப்பட்ட முறையிலே தனிமையிலே சிந்திப்பதும் குறைந்துவிட்டது, அது போன்று நரகத்தைப் பற்றியும்.
சகோதரர்களே! இது நம்முடைய ஈமானை மிக அதிகமாக பலவீனப்படுத்தியிருக்கிறது, நம்முடைய யக்கீனை இது மிகப் பலவீனப்படுத்தி இருக்கிறது, நம்முடைய மார்க்க பற்றை இது பலவீனப்படுத்தி இருக்கிறது, நம்முடைய ஈமான் யக்கீன் பலமாக வேண்டும் என்றால் சொர்க்கத்தைப் பற்றி அதிகமாக பேச வேண்டும், நரகத்தைப் பற்றி அதிகமாக பேச வேண்டும்.
ஆஹிரத்தின் உடைய நினை வூட்டல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும். இப்போ இந்த சொர்க்க வாழ்க்கை நீங்கள் குர்ஆனில் எடுங்கள் 500 மட்டும் தான் சட்ட வசனங்கள். ஹலால் ஹராமுடைய வசனங்கள் மீதம் 6236 வசனங்களில், 500 போய்ட்டா மிச்சம் 6000க்கும் மேற்பட்ட வசனங்கள் இதில் அல்லாஹ்வுடைய தன்மை சம்பந்தப்பட்ட வசனங்கள்.
பிறகு நபிமார்களுடைய வரலாறுகள் சம்பந்தப்பட்ட வசனங்கள். இப்படி ஆயிரம் ஆயிரம் வசனங்களை எடுத்து விட்டால் மிச்சம் இருக்கக் கூடிய வசனங்கள் இருக்கின்றனவே அல்லாஹ் சுபஹானல்லஹ் சொர்க்கத்தைப் பற்றி பேசக்கூடிய வசனங்கள், நரகத்தைப் பற்றி அல்லாஹுத்தஆலா எச்சரிக்கை செய்யக்கூடிய வசனங்கள்.
அறிவிப்பில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹதீஸ் என்று எடுத்துக் கொண்டால், நீங்கள் பார்க்கலாம் ஹதீஸ் உடைய நூல்களை பொதுவாக பெரும்பாலும் இமாம் கள் என்ன செய்திருக்கிறார்கள். கிதாப் சீபத்தில் ஜன்னா அல்லது கிதாப் அவ்ஷாப் அல்ஜன்னா சொர்க்கத்தின் வர்ணனைகள் என்று தனி அத்தியாயம் வைத்திருப்பார்கள்.
ஹதீஸ் நூல்கள் உடைய பிற்பகுதியில் வந்து விடுவதால், பெரும்பாலும் முற்பகுதியில் இபாதத்து சம்பந்தமாக இருக்கும் பொழுது அதை படித்துவிட்டு இந்த பக்கம் போகாமலேயே ரொம்ப பேர் கிதாபை அப்படியே வைத்திருப்பார்கள்.
ஒரு ஹதீஸ் அல்ல. இந்த மாதிரி நிறைய ஹதீஸ்கள். அமலை ரசலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லும் பொழுது, இரண்டு நிபந்தனைகளை சொல்வார்கள். அது என்ன? உதாரணத்திற்கு
أن رسول الله ﷺ قال: مَن قام رمضان إيمانًا واحتسابًا غُفر له ما تقدَّم من ذنبه
யார் லைலத்துல் கதிர் உடைய இரவில் நின்று வணங்குவாரோ, ஈமானோடு அல்லாஹ்வின் மீது மறுமையின் மீது உண்டான நம்பிக்கையோடு, இரண்டாவது நிபந்தனை என்ன?
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1901
இந்த அமலுக்கு வாக்களிக் கப்பட்ட நன்மை என்ன? அமலின் மீது ஆசை வைத்தவர்களாக, நீங்கள் ஒரு தொழுகையை தொழுகுறீர்கள். இப்போ மஹ்ரிப் தொழுதோம். இந்த மஹ்ரிப் தொழுகை எனக்கு சொர்க்கத் திற்கான வழி. எனக்கு சொர்க்கத் திற்கான அமல் என்ற ஆசை இல்லாமல் தொழுதால் அது தொழுகையே கிடையாது. ஒவ்வொரு தொழுகையையும் அல்லாஹ் இந்த தொழுகையை கொண்டு எனக்கு சொர்க்கத்தை கொடுப்பான் என்ற ஆசையோடு தொழ வேண்டும்.
ஒரு ஒரு இபாதத்தையும், தொழுகை மட்டுமல்ல, எந்த ஒரு இபாதத்தையும் ஆசையோடு செய்ய வேண்டும். என்ன ஆசை அல்லாஹ்வுடைய பொருத் தத்தின் ஆசை. சொர்க்கத்தின் ஆசை. அப்போதான் அந்த தொழுகையில் ஒரு பக்கம் பயம் பாவத்தை நினைத்து. யா! அல்லாஹ் என்னை மன்னித்து விடு .உனக்கு முன்னால் வந்து விட்டேன்.
தொழுகைகள் அவற்றுக்கு மத்தியில் நடக்கக்கூடிய பாவங் களை போக்க கூடியவை, யா! அல்லாஹ் இந்த தொழுகையை எனது பாவத்திற்கு மன்னிப்பாக ஆக்கிவிடு. இரண்டாவது என்ன? யா!அல்லாஹ் இந்த தொழுகையை எனது சொர்க்கத்திற்கு காரணமாக ஆக்கு. உனது பொருத்தத்திற்கு காரணமாக ஆக்கு. இந்த இரண்டு நம்பிக்கை, இரண்டு தேடல் இருக்க வேண்டும் ஒன்று ஒரு இபாதத்தைக் கொண்டு இந்த இபாதத் எனக்கு பாவமன்னிப்புக்கான காரணமாக இருக்க வேண்டும்.
اِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِ
நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன.
(அல்குர்ஆன் : 11:114)
நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன. அடுத்ததாக சொர்க்கத்தின் மீது உண்டான ஆசை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய ஹதீஸில் பார்த்தீர்கள் என்றால், சுபஹானல்லாஹ். அதிகமாக எல்லா நேரங்களிலும் சொர்க்கத்தை பற்றிய பிரஸ்தாபம், சொர்க்கத்தைப் பற்றிய கலந்துரையாடல் அந்த விரிவுரை நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
சஹாபாக்களை பொறுத்தவரை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஜ்லிஸில் இருந்து கொஞ்சம் சென்று விட்டாலே மீண்டும் அந்த மஜ்லிஸிற்கு வர வேண்டும் என்ற ஆசை உடையவர்களாக இருப்பார்கள். என்ன சொல்வார்கள்.
நாங்கள் எங்களது குடும்பத்தாரோடு சென்று விட்டால், மனைவி மக்களோடு கலந்து விட்டால் உங்களது சபையிலே இருக்கக் கூடிய அந்த பசுமையான யக்கீனை இழந்து விடுகிறோமே, என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மஜிலிஸை நோக்கி விரைந்து ஓடி வருவார்கள். காரணம் என்ன? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மஜ்லிஸ் எப்பொழுதும் ஆகிறத்தை பற்றி பேசப்படக் கூடிய மஜ்லிஸாக இருந்தது. அதாவது ஹலால் ஹராம் உடைய சட்டங்கள் அதை போதிப்பது.
மற்ற பெரும்பாலான நேரங்கள் நபி (ஸல்) சஹாபாக்களுக்கு ஒழுக்கங்களை, தவ்ஹீதை மற்ற மற்ற விஷயங்களை கற்றுக் கொடுத்ததற்கு பிறகு, இதற்கெல்லாம் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. இதையெல்லாம் நாம் ஏன் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு என்ன வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கை யைப் பற்றி பேசக் கூடியவர்களாக இருந்தார்கள்.
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ: أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ البَادِيَةِ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ قَائِمَةٌ؟ قَالَ: «وَيْلَكَ، وَمَا أَعْدَدْتَ لَهَا» قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا إِلَّا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ» فَقُلْنَا: وَنَحْنُ كَذَلِكَ؟ قَالَ: «نَعَمْ» فَفَرِحْنَا يَوْمَئِذٍ فَرَحًا شَدِيدًا، فَمَرَّ غُلاَمٌ لِلْمُغِيرَةِ وَكَانَ مِنْ أَقْرَانِي، فَقَالَ: «إِنْ أُخِّرَ هَذَا، فَلَنْ يُدْرِكَهُ الهَرَمُ حَتَّى تَقُومَ السَّاعَةُ» وَاخْتَصَرَهُ شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
ஸஹீஹுல் புகாரியில் ஒரு அறிவிப்பு வருகிறது. ரொம்ப முக்கியமான அறிவிப்பு நபி (ஸல்) மறுமையைப் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறாங்க. அதாவது எப்படி என்றால் நபி ( ஸல்) அவர்களுடைய அந்த சபை ஒரு அமைதியான சபையாக, அழுகை நிறைந்த சபையாக, கண்களில் இருந்து கண்ணீர் வரக்கூடிய ஒரு சபையாகவே இருந்தது. பொதுவாக பெரிய சஹாபாக்கள் அங்கே இருக்கிறவர்கள் யாரும் பேச மாட்டார்கள். அபூபக்கர், உமர், உஸ்மான், அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களெல்லாம் ரொம்ப பயப்படுவார்கள். ரசூலுல்லாஹ் மேல ரொம்ப மரியாதை வைத்திருப்பார்கள் அவர்கள் என்ன சொல்வார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி எண் : 6167
பொதுவாக அந்த பெரிய சஹாபாக்கள் ரசூலுல்லாஹ் மேலே உள்ள கண்ணியத்திலே நாங்கள் என்ன ஆசைப்படுவோம்னா யாராவது ஒரு ஆராபி வரமாட்டாரா, கிராமத்திலிருந்து அவர் ஏதாவது ஒரு நாலு கேள்வி கேட்க மாட்டாரா, அதன் மூலமாக நாம சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாமே என்று இந்த ஆராபிகள் வருவதை ஆசைப் பட்டு கொண்டிருப்பார்கள்.
அந்த மாதிரி ஒரு கிராமத்து மனிதர் உட்கார்ந்திருந்தார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆஹிரத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, கிராமத்தில் உள்ளவர்களுக்கு அந்த இயல்பு இயற்கையாகவே இருக்கும். அவர்களிடம் formality இருக்காது. relaxa இருப்பாங்க. correcta நேருக்கு நேர்பேசிப் பழகுவார்கள். இந்த ஆஹிறத்தை பற்றி கேட்டுக் கொண்டே இருந்தவர். அவருக்கு அவர் அறியாமல் ஒரு நிலை ஏற்படுகிறது. உடனே என்ன செய்கிறார் யா! ரசூலல்லாஹ், மறுமை எப்போது வரும் என்று கேட்டு விடுவார்.
கியாமத் துடைய அடையாளங்கள், ஆஹிறத்தை பற்றி பேசும்போது, அவர் என்ன கேட்டு விடுவார்? மறுமை எப்போது நிகழும்? கியாமத் எப்போ வரும்? அதற்கு பல காரணங்கள் சொல்கிறார். ஏன் இப்படி கேட்டார். ஒன்று சொர்க்கத்தைப் பற்றி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்ன அந்த சிறப்புகளை கேட்டவுடன் சொர்க்கத்துக்கு போகணும் என்கிற அந்த ஆசை, அந்த தேடல், அல்லாஹ்வை பற்றி சொன்ன உடனே அல்லாஹ்வை பார்க்க வேண்டும் என்ற ஆசை,அல்லாஹ் மேலே உள்ள முஹப்பத் எதார்த்தமாக அந்தக் கேள்வியை அவர் கேட்டுவிட்டார்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரைப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு பதில் சொல்ல வில்லை திரும்ப அவர்கள் உரையை அவர்கள் தொடர்ந்து விட்டார்கள். அந்த கேட்டவர் மஜ்லிஸிலிருந்து கொஞ்சம் தள்ளி போய் உட்கார்ந்து விட்டார். ஏதோ தவறாக கேட்டு விட்டோமோ ரசூலுல்லாஹ் பதில் சொல்லலையே என்ன! ஆச்சு பயான் முடிகிறது. ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள் மறுமையை பற்றி விசாரித்தவர்
எங்கே? சஹாபாக்களுக்கெல்லாம் ஒரு பயம் ஏதோ தவறாக கேட்டார் போல, கண்டிப்பாக என்ன சொல்ல போறாங்களோ சொல்லி அவர், யா! ரசூலுல்லாஹ் அல்லாஹ்வுடைய தூதரே ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நான் தான் என்று சொல்கிறார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரிடத்திலே கேள்வி கேட்கிறார்கள். அந்த மறுமைக்காக நீ என்ன செய்து வைத்திருக்கிறாய். சஹாபாக்களை பொறுத்த வரைக்கும் அவர்கள் பொய்யே சொல்ல மாட்டார்கள்.
பொய்யே சொல்லாதவர்கள் தான் சஹாபாக்கள் ஆவார்கள், பொய் சொல்லிவிட்டால் அவர்களை முனாஃபிக் உடைய லிஸ்டில் அல்லாஹ் சேர்த்து விடுவான். யாராவது ஒருத்தர், ரசூலுல்லாவுடன் சுற்றி இருக்கிறவர்களில் பொய் சொல்லிவிட்டால் அவரை, அல்லாஹ் யாருடைய லிஸ்டில் சேர்த்து விடுவான்? முனாஃபிக்கின் என்ற லிஸ்டில் சேர்த்து விடுவான். அவர்கள் அஸ்காபுர் ரசூல்லிஸ்டில் வர மாட்டார்கள் கூட இருப்பார்கள் ரசூலுல்லாஹ் உடன்.
அல்லாஹ் ரசூலுல்லாஹ்விற்கு அடையாளம் காட்டி விடுவான். முனாஃபிக்கை பொய்யர்கள் என்று அல்லாஹ் அடையாளம் காட்டி விடுவான். அந்த கிராம வாசிகள் சொல்கிறார். யா!ரசூலல்லாஹ் அதிகமான நோன்பையோ, அதிகமான தொழுகையையோ, அதிகமான அமல்களையோ நான் சேர்த்து வைத்திருக்கவில்லை. ஆனால் என்றாலும் நான் அல்லாஹ்வை நேசிக்கிறேன்.
அவனுடைய ரசூலை நேசிக்கிறேன் இந்த வார்த்தை இதற்கு அவர் தகுதி இல்லாமல் சொல்லி இருந்தால் வசனம் இறங்கி இருக்கும். இன்று குர்ஆனில் ஒரு வசனத்தை ஓதி இருப்போம். அவர் சொன்னார் என்கிட்ட பெருசா இபாதத் இல்லை. சலாத் இல்லை சவுமில்லை ஆனால் நான் அல்லாஹ்வை நேசிக்கிறேன். ரசூலை நேசிக்கிறேன்.
இதைக் கேட்ட உடனே ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த சஹாபியை பார்த்து, அந்த ஆராபியைபார்த்து சொன்னார்கள்: மனிதன், அவன் யாரை நேசித் தானோ அவரோடு மறுமையில் இருப்பான். இந்த ஹதீஸை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய வபாத்துக்கு பிறகு ரசூலுல்லாஹ் உடைய பணியாளர் அனஸ் இப்னு மாலிக் ரலி யல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கிறார்கள்.
சொல்கிறார்கள், இந்த ஹதீஸை கேட்டவுடனே எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம் அவ்வளவு மகிழ்ச்சி. எங்களுக்கு ஏனென்றால் நாங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்கள், ரசூலை நேசிப்பவர்கள், சொல்லிவிட்டு சொல்கிறார்கள், நான், தன்னைப் பற்றி சொல்கிறார், நான் அபூபக்கரை நேசிக்கிறேன், நான் உமரை நேசிக்கிறேன், நான் ரசூலுல்லாஹ்வை நேசிக்கிறேன், நான் அவர்களோடு இருப்பேன் என்று ஆதரவு வைக்கிறேன், நான் அவர்களோடு இருப்பேன் என்று ஆசைப்படுகிறேன். சஹாபாக்களுக்கு இந்த ஹதீஸ் மிகப் பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி எண் : 6167
சகோதரர்களே! இந்த சொர்க்கம் இருக்கிறதே, நம் முடைய கற்பனைக்கு அப்பாற்பட்ட உலகம் அது அல்லாஹுத்தஆலா விசேஷமாக நல்லவர்களுக்காக நேரடியாக ஏற்படுத்திய நிஃமத்களுக்கான இல்லம் தான் சொர்க்கம்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى: أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ، مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ " قَالَ أَبُو هُرَيْرَةَ: " اقْرَءُوا إِنْ شِئْتُمْ: فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ" وحَدَّثَنَا عَلِيٌّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «قَالَ اللَّهُ» مِثْلَهُ، قِيلَ لِسُفْيَانَ: رِوَايَةً؟ قَالَ: فَأَيُّ شَيْءٍ
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு ஹதீஸில் சொல்கிறார்கள். அல்லாஹ் சொல்வதாக நான் எனது அடியார்களுக்காக தயார் செய்து வைத்திருக்கிறேன். எந்த கண்களும் பார்த்திராத, எந்த காதும் கேட்டீராத, எந்த மனிதர் உடைய உள்ளத்திலும் உதித்திராத ரஹ்மத்துகளை, என்னுடைய சாலிஹான அடியார்களுக்காக நான் தயார் செய்து வைத்திருக்கிறேன். என்று சொல்லிவிட்டு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய இந்த வசனத்தை நீங்கள் ஓதிப் பாருங்கள்.
அவர்களுக்கு கண் குளிர்ச்சியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள நிஃமத்துகளை இந்த உலகத்திலேயே யாருமே தெரிந்து கொள்ள முடியாத, அறிந்து கொள்ள முடியாத, அவர்கள் செய்த அமலுக்கு கூலியாக அந்த முஃமினுடைய அந்த சொர்க்கம், அல்லாஹ் சுபஹானல்லாஹ், அதனுடைய மாளிகைகள், அதனுடைய நதிகள் ,அங்கே இருக்கக்கூடிய ஹுர், அங்கே இருக்கக்கூடிய உணவுகள், அங்கே இருக்கக் கூடிய குடி பானங்கள், ஏன் அங்கே இருக்கக்கூடிய மண்ணை பற்றி கூட ரசூலுல்லாஹ் ஸல்லல் லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 4779
அங்கே நமக்கு கொடுக்கக்கூடிய சீப்பு, தலை வாருவதற்கு கொடுக்கக்கூடிய சீப்பை பற்றி கூட ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். ஒவ்வொரு நிஃமத்தை பற்றி அவ்வளவு அழகாக வர்ணிக்கிறார்கள். அல்லாஹ்வுடைய வர்ணிப்பு சூரத்துல் ரஹ்மானி ஓதி பாருங்கள்,சூரத்துல் வாக்கிஆவை ஓதி பாருங்கள், சூரா சாஃபாத்தை ஓதி பாருங்கள்.
அல்லாஹ் எப்படி வர்ணிக்கிறான். அந்த சொர்க்கத்தை அதனுடைய நிஃமத்துக்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களுக்கு ஆர்வமூட்டி கொண்டே இருந்தார்கள். அந்த சொர்க்கத்தின் உடைய தேடலை சஹாபாக்கள் உடைய உள்ளத்திலே புதுப் பித்துக் கொண்டே இருந்தார்கள். அல்லாஹ் சுபஹானல்லாஹூ தஆலா முஃமின்களுக்கு, அவர்களுடைய மரணத்திலே மூன்று நற்செய்திகளை சொல்கிறார்.
அதில் ஒன்று நீங்கள் பயப்படாதீர்கள், நீங்கள் கவலைப்பட வேண்டாம், இந்த உனது சந்ததிகளைப் பற்றி, இப்ப இந்த சந்ததிகளுடைய நிலை, நாம் இரு உறவுகளுக்கு மத்தியிலே இருக்கிறோம். ஒன்று நம்முடைய சென்று விட்ட உறவுகள், ஒன்று தந்தை, தந்தையின் தந்தை, பாட்டன். தாய், தாயுடைய தாய் இன்னொன்று நமக்குப் பின்னால் வரக்கூடிய நம்முடைய பிரிவுகள். நம்முடைய கிளைகள். நம்முடைய பிள்ளை, பிள்ளையின் பிள்ளை, பேரன், அல்லாஹுத்தஆலா ஒரு முஃமினுக்கு எப்படி வைத்திருக்கிறான் என்றால், சொர்க்கத் தில் கவலையே இருக்கக் கூடாது, சொர்க்கத்திலே கவலையே இருக்கக் கூடாது.
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ - وَاللَّفْظُ لِإِسْحَاقَ - قَالَا: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: قَالَ الثَّوْرِيُّ: فَحَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، أَنَّ الْأَغَرَّ، حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا " فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ}
ஸஹீஹ் முஸ்லிமுடைய அறிவிப்பிலே என்ன வருகிறது? சொர்க்க வாசிகள், சொர்க்கத்திற்குள் போகும்போது நான்கு கேரண்டி அல்லாஹுத்தஆலா கொடுத்து அனுப்புவான். ஒரு கேரண்டி என்ன இந்த சொர்க்கத்திலே, உங்களுக்கு உடல் ஆரோக்கியம் இருக்கும் ஆனால் நோய் இருக்காது.
எவ்வளவு பெரிய விஷயம் பாருங்கள். இரண்டாவது கேரண்டி என்ன உங்களுக்கு இங்கே நிஃமத் கூடிக்கொண்டே இருக்கும். சந்தோஷம் கூடிக்கொண்டே இருக்கும். இங்கே உங்களுக்கு கஷ்டம் இருக்காது. இங்கே நீங்கள் வாலிபமாகவே இருப்பீர்கள், வயோதிகமே இருக்காது. உங்களுக்கு நிரந்தரமான ஹையாத்து, மௌவுத்தே இருக்காது.
அப்போ கவலையே இல்லாத ஒரு உலகம்தான், இல்லம் தான் சொர்க்கம் அந்த சொர்க்கத்தில் போய் இப்போ இன்னொரு விஷயத்தை பார்ப்போம் முஃமினான அல்லாஹுத்தஆலா அப்படித்தான் ஆக்கிவிட்டான், ஆக்கி விடுவான்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2837 குறிப்பு (3)
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَ الصّٰبِـِٕیْنَ وَالنَّصٰرٰى وَالْمَجُوْسَ وَالَّذِيْنَ اَشْرَكُوْۤا اِنَّ اللّٰهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ
நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள், யூதர்கள், மஜூஸிகள் இன்னும், இணைவைத்தவர்கள் (ஆகிய) இவர்களுக்கு மத்தியில் மறுமைநாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இவர்களின் செயல்கள்) எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன் ஆவான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல).
(அல்குர்ஆன் : 22:17)
முஃமின்களை முஃமின் அல்லாதவர்களிடம் இருந்து அல்லாஹ் பிரித்து விடுவான். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி, நம்முடைய முஃமினான குடும்பத்தார்களை பற்றி, நம்முடைய தாய் தந்தையோ, அவர்களுடைய பாட்டன் பூட்டன், நம்முடைய பிள்ளைகள். அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா இது பற்றி, அல்குர்ஆனிலே இரண்டு வசனங்களில் சொல்கிறான். நம்முடைய மகிழ்ச்சியை, நம் முடைய சந்தோஷத்தை பூர்த்தி செய்வதற்காக, அல்லாஹ்வுடைய பெரிய ஏற்பாடு சொர்க்கத்தில், மகிழ்ச்சியில் final last இரண்டு மகிழ்ச்சி இருக்கிறது. அந்த இரண்டு மகிழ்ச்சி என்ன? அதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ؟ فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالُوا: يَا رَبِّ، وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا "
அல்லாஹுத்தஆலா முதலில் சொர்க்கவாசிகளை கூப்பிட்டு கேட்பான். நீங்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறீர்களா? அப்போது சொர்க்கவாசிகள் சொல்வார்கள். யா! அல்லாஹ் நாங்கள் எப்படி சந்தோசம் அடை யாமல் இருக்க முடியும். எங்களை நரகத்தில் இருந்து பாதுகாத்தாயே சொர்க்கத்தில் எங்களை பிரவேசிக்க செய்தாயே, அல்லாஹ் சொல்கிறான்: இல்லை உங்களுக்கு ஒரு சந்தோசத்தை வைத்திருக்கிறேன்.
அப்போது சொர்க்கவாசிகள் கேட்பார்கள் யா! அல்லாஹ் அது என்ன சந்தோஷம் என்று, முதலாவது அல்லாஹ் சொல்வான் இன்று நான் உங்கள் மீது என்னுடைய மகிழ்ச்சியை என்னுடைய பொருத்தத்தை, என்னுடைய சந்தோசத்தை இறக்கி விட்டேன். இனிமேல் நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன்.
அறிவிப்பாளர் : அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6549
அதைக் கேட்ட உடனே அந்த இன்பத்திலே சொர்க்கவாசிகள் திளைத்து விடுவார்கள். இதுக்கு முன்னாடி அவர்கள் அனுபவித்த எல்லா இன்பங்களையும் மறந்து விடுவார்கள். அல்லாஹ்வுடைய பொருத்தம் கிடைத்ததில் அவ்வளவு மன மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்திருப்பார்கள். இது ஒரு மகிழ்ச்சி. அடுத்ததாக அல்லாஹ் சுபஹானல்லாஹுத்த ஆலா
وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ, اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ
அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக, அழகாக) இருக்கும். தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்.
(அல்குர்ஆன் : 75:22, 23)
அல்லாஹுத்தஆலா தன்னுடைய திருமுகத்தை காட்டுவான். தன்னுடைய முகத்தில் உள்ள நூறுடைய ஹிஜாப் அல்லாஹ் அகற்றி தன்னுடைய திருமுகத்தை காட்டுவான்.
لِلَّذِيْنَ اَحْسَنُوا الْحُسْنٰى وَزِيَادَةٌ
அல்லாஹ்வை அழகிய முறையில் வணங்கி, மார்க்க சட்டங்களை பின்பற்றி வாழ்ந்து) நல்லறம் புரிந்தவர்களுக்கு மிக அழகிய கூலியும் (இறையருளில் இன்னும்) அதிகமும் உண்டு.
(அல்குர்ஆன் : 10:26)
அல்லாஹு அக்பர் !இந்த இரண்டு நிஃமத்துகளும் சொர்க்கவாசிகளுக்கு எந்த ஈடும் இல்லாதது. அது போக அல்லாஹ் சுபஹானல்லாஹ் சின்ன சின்ன சந்தோஷத்தை சொர்க்கத்தில் அதிகப்படுத்திக் கொண்டே இருப்பான். அதில் ஒன்றுதான் சொர்க்கவாசிகளை அவர் களுடைய உறவுகளோடு அல்லாஹ் சேர்ப்பான். உறவு களோடு மட்டுமல்ல. அவர்கள் நேசித்த, தக்வாவின் அடிப்படையிலே நட்பு வைத்த, நண்பர்களோடு அல்லாஹ் சேர்ப்பது,
اَلْاَخِلَّاۤءُ يَوْمَٮِٕذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِيْنَ
இறையச்சமுள்ளவர்களைத் தவிர நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர், சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன் : 43:67)
அல்லாஹ் சொல்கிறான். நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளாக ஆகிவிடுவார்கள். மறுமையிலே தக்குவாவின் அடிப்படையிலே நட்பு வைத்தவர்களை தவிர நீங்கள் படித்திருப்பீர்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "
ஏழு வகையான மக்கள் நாளை மறுமையிலே மஹ்ஸரிலே அர்ஷுடைய விசேஷமான நிழலிலே இருப்பார்கள். மக்கள் எல்லாம் நிழல் இல்லாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கும் போது, அதிலே ஒரு கூட்டம் யார்? அல்லாஹ்வுக்காக நேசித்து, அதற்காகவே சந்தித்து, அதற்காகவே பிரிந்தவர்கள். அல்லாஹ் சுபஹானல்லாஹூதஆலா சூராத்தூர் உடைய வசனம்,
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660, 1423
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَـقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَاۤ اَلَـتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَىْءٍ
இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ, அவர்களின் சந்ததிகளும் இறை நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களின் சந்ததிகளை அவர்களுடன் நாம் சேர்த்து வைப்போம்.
(அல்குர்ஆன் : 52:21)
எவ்வளவு அழகா அல்லாஹ் சொல்கிறான்: வல்லதீன ஆமனு, ஈமானுடையவர்கள் அப்போ குர்ஆனில் அல்லாஹ் ஈமான் உடையவர் என்று சொல்கிறான் என்றால், அவன் முஃமின்களுக்கு என்னென்ன அடையாளங்களைச் சொன்னானோ, அந்த அடையாளங்கள் எல்லாம் அங்கே இருக்க வேண்டும்.
நாம் ஏற்கனவே தெரிந்து கொண்டோம் ஈமான் என்பது ஒரு டிரஸ் இல்லை அதை போடுறதுக்கு, அது ஒரு பேச்சல்ல பேசி முடித்துவிட்டு ஈமான் வந்துவிடும் என்று சொல்வதற்கு, அது வாழ்நாள் எல்லாம் இருக்க வேண்டிய ஒரு அமல், ஒரு சத்தம், ஒரு அஃலாக், ஒரு இபாதத், ஒரு அக்கீதா எல்லாம் சேர்ந்தது.
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَان
(அல்குர்ஆன்:52:21)
அத்தா doctor நானும் doctor, அத்தா engineer நானும் engineer. அத்தா advocate நானும் advocate. அத்தா businessman I am also businessman. அத்தா உடைய business நான் செய்கிறேன். இதெல்லாம் உங்கள் துணியாவிற்கு, அத்தா hotel வைத்திருந்தார் நானும் hotel வைத்திருக்கிறேன். அத்தா company வைத்திருந்தார் நானும் company வைத்திருந்தேன். இதெல்லாம் உங்கள் துன்யா விற்கு, அல்லாஹ் என்ன சொல்கிறான்
وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ
(அல்குர்ஆன் : 52:21)
தங்களுடைய அந்த ஈமான் கொண்ட மூதாதைகளை, ஈமானிலே பின்பற்றியவர்கள். அத்தா தொழுகையாளி பிள்ளை தொழுகையாளி. அத்தா ஹஜ் செய்தார் இவரும் ஹஜ் செய்தார். அத்தா தர்மம் கொடுப்பார் இவரும் தர்மம் கொடுப்பார்.
அத்தா சதக்கா கொடுப்பார் இவரும் சதக்கா கொடுப்பார். அத்தா நல்ல அஃலாத் உள்ளவர் இவரும் நல்ல அஃலாத்து உள்ளவர். அத்தா குரானை நேசிப்பவர். இவரும் குர்ஆனை நேசிப்பவர். நாமெல்லாம் கேட்கக்கூடிய துஆ, ஆனால் சில நேரங்களில் துஆவுடைய அர்த்தம் தெரியாமல் கேட்டுக் கொண்டிருக்கிறோம் அல்லது அதனுடைய கருத்து தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.
رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا
இன்னும், அந்நாளில் அநியாயக்காரன் (-இணைவைத்தவன்) தனது இரு கரங்களையும் கடிப்பான், “நான் தூதருடன் (எனக்கு) ஒரு (நல்ல) வழியை ஏற்படுத்தி (அவரை பின்பற்றி) இருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 25:74)
இந்த துஆவில் என்ன கேட்கிறோம். யா!அல்லாஹ், இறையச்சம் உள்ளவர்களை எங்களுக்கு இமாமாக ஆக்கு என்று கேட்கிறோம், என்ன அர்த்தம்? இந்த ஆயத்தை புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய 'குர்ஆன் சுன்னாவை பற்றி பிடித்தல்' என்ற பாடத்தில் ஒரு தலைப்பாக கொண்டு வருகிறார்கள்.அதற்குப் பிறகு ஒரு பெரிய தாபிஈத் முஃபஸ்ஸிருடைய விளக்கத்தை பதிவு செய்கிறார்.என்ன சொல்கிறார்கள்?
அந்த தாபியீத், எங்களது பிள்ளைகளை இறை யச்சம் உள்ளவர்களாக ஆக்கு என்று கேட்க வேண்டிய துஆ விடத்தில் அல்லாஹ் எப்படி கேட்க சொல்கிறான். இறையச்சம் உள்ளவர்களுக்கு எங்களை இமாமாக ஆக்கு என்று அல்லாஹ் கேட்கச் சொல்கிறான்.
அதாவது உங்கள் பிள்ளை முத்தக்கீ ஆக இருக்க வேண்டும் என்றால், நீ முதலில் அல்லாஹ்விடத்தில் கேட்டு உன்னை முத்தக்கீ ஆக்க சொல்லி நீ முத்தகீயாக ஆகு. நம்முடைய பிள்ளைகளுக்கு வழிகாட்டி யார்? நாமதான் அம்மா தொழுதா பிள்ளை தொழுகும்.
அம்மா வக்துல கரெக்ட்டா முசல்லாவுக்கு போயிட்டா, பிள்ளையும் பக்கத்தில் வந்து நின்றும். அத்தா மஸ்ஜிதுக்கு போனா, பிள்ளையும் நானும் வரேன்னு நிப்பான். இறையச்சம் உள்ளவர்களுக்கு இமாமாக ஆக்கு என்றால் நம்முடைய பிள்ளைகளை முத்தக்கீயாக அல்லாஹ் சொல்கிறான்.
அந்த முத்தகீகளுக்கு வழிகாட்டியாக நீங்கள் இருங்கள். நீங்கள் ஈமான், அவருக்கும் ஈமான். நீங்கள் தவ்ஹீதில் உறுதியாக இருக்கிறீர்கள். அவரும் தவ்ஹீதில் உறுதியாக இருக்கிறார். நீங்கள் இபாதத்தில் உறுதியாக இருக்கிறீர்கள். அவரும் இபாதத்தில் உறுதியாக இருப்பார்.
நீங்கள் ஹலால் ஹராமில் உறுதியாக இருக்கிறீர்கள். அவரும் ஹலால் ஹராமில் உறுதியாக இருப்பார். உங்களுடைய அஃலாக் பார்த்து பார்த்து படித்துக் கொண்டே இருப்பான் அல்லாஹ் என்ன சொல்கிறான். துனியாவில் அது விதிக்கப்பட்ட ஒன்று.
ஆஹிறத்தில் நீங்கள் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றால், சொர்க் கத்தில் ஒன்றாக இருக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக உங்களுக்கு தெரியும். ஆஹிறத்து என்பது தரஜாத், ஆஹிறத் என்பது நிறைய தரஜாக்களை உடையது. ஒரு தரஜாவே வானத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள அளவைவிட அதிகமாக இருக்கும். ஒரு தரஜாவே ஏனென்றால் சுபஹானல்லாஹ் நீங்கள் இன்றைக்கு space, நட்சத்திரம், கோள் இதை எல்லாத்தையும் கொண்டு போய் ஆஹிறத்தில் வைத்தால், ஒரு சொட்டு மாதிரி. எவ்வளவு பெரியதாக இருக்கும். சுபஹானல்லாஹ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.
நாளைக்கு சொர்க்கவாசிகள், சிலரை ரொம்ப தூரத்தில் பார்ப்பார்கள். சொர்க்கத்தில் உயரத்தில், எந்த அளவு என்றால் நீங்கள் நட்சத்திரத்தை பார்ப்பது மாதிரி தூரத்தில், சஹாபாக்கள் கேட்கிறார்கள், யா!ரசூலல்லாஹ் அவர்கள் எல்லாம் நபிமார்களாக இருப்பார்களோ என்று சொல்லி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்.
இல்லை அவர்கள் ஈமானில் உண்மையாக இருந்து நபிமார்களை உண்மைப்படுத்தியவர்கள். ஒரு சாதாரண ஆனால், உண்மை அவர்களுடைய தரஜாவே அவ்வளவு தூரம் என்று சொன்னால், அதற்கு மேல் சுபஹானல்லாஹ் அப்போ அல்லாஹ் என்ன செய்கிறான். நம்ம குடும்பத்தார்களில் நம்முடைய பாட்டன் ரொம்ப பெரிய வணக்கசாலியாக இருந்திருப்பார்.பெரும்பாலும் அப்படித்தான் இருந்தார்கள்.
நாம் இந்த துன்யாவில் கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சம் அமல் செய்கிறோம். கொஞ்சம் விற்றோம். சில நேரத்தில் நமக்கு வரக்கூடிய பிள்ளை இன்னும் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. ஆனால் அந்த ஈமானுடன் ஷிர்க்கு கலக்காத ஈமான், நயவஞ்சகம் கலக்காத ஈமான் முகஸ்துதி கலக்காத அமல் இந்த அடிப்படையில் அவர்கள் கரெக்டா இருந்துட்டா, இந்த அமல்களில் ஏற்படக்கூடிய கொஞ்சம் கொஞ்சம் வீக்னஸ், பலவீனம் இது எல்லாம் அல்லாஹுத்தஆலா எடுத்துவிட்டு, ரஹ்மான், யா! அல்லாஹ் எவ்வளவு பெரிய கரீம் அவன்.
அக்குரமுல் அக்ரமீன். கொடை வள்ளல்களுக்கு எல்லாம் மிகப்பெரிய மகாகொடை வள்ளல். கருணையாளர்களுக்கெல்லாம் பெரிய மஹா கருணையாளன். கொடுப்பவர்களுக்கெல்லாம் மேலாக மிகப்பெரிய கொடையாளன். அவன் என்ன செய்கிறான் அந்த சந்ததியில் அந்த துறியா அந்த கௌம் அந்தக் கதிராவிலேயே ரொம்ப டாப்பஸ்ட் அமல் செய்தவர்களுக்கு கொடுத்த சொர்க்கத்தை அவர் கீழே இறக்கி கொண்டு வர முடியாது பாருங்கள். அது அநியாயமாக போய்விடுமே அவர் வந்து,
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
எவர்கள் நமக்காக (நமது தீன் உயர்வதற்காக இணைவைப்பாளர்களிடம்) போரிட்டார்களோ - அவர்களுக்கு நாம் நிச்சயமாக நமது (நேரான) பாதைகளை வழிகாட்டுவோம்.
(அல்குர்ஆன் : 29:69)
وَجَاهِدُوْا فِى اللّٰهِ حَقَّ جِهَادِه
அல்லாஹ்வின் பாதையில் (இணை வைப்பவர்களிடம்) முழுமையாக போரிடுங்கள்.
(அல்குர்ஆன் : 22:78)
அந்தக் கேட்டகிரியில் உள்ளவர்.
والسابقون السابقون أولئك المقربون
(அல்குர்ஆன் : 56:10,11)
அந்தக் கேட்டகிரியில் உள்ளவர். அவர் அல்லாஹ்வுக்காக தன்னை அர்ப்பணித்தவர். அவருக்கு அல்லாஹ் அப்படி கொடுத்து இருப்பான்.
وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ
அந்த ஈமானில் கரெக்டாக இருந்தார். இஸ்லாமில் கரெக்டாக இருந்தார்கள். சில பாவங்கள் செய்திருந்தார்கள்.
وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًـا وَّاٰخَرَ سَيِّئًا
இன்னும், (நயவஞ்சகர்கள் அல்லாத) மற்றவர்கள் சிலரும் (மதீனாவிலும் அதைச் சுற்றிலும்) இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர்.
(அல்குர்ஆன் : 9:102)
கொஞ்சம் மிஸ் பண்ணி இருந்தாங்க. கொஞ்சம் கவனக் குறைவு. அல்லாஹ் என்ன செய்கிறான். அல்லாஹ்வுடைய ஃபதலை காட்டுகின்றான். இவர்களுக்கெல்லாம் சொர்க்கம் கொடுப்பதாக இருந்தால் இவர்களுடைய தரஜாவிற்கு ஏதாவது ஒரு மூலையில் பிளாட் எழுதி கொடுக்கிற மாதிரி கொடுக் கணும். ஆனால் அல்லாஹ் என்ன செய்கிறான்.
ரஹ்மான் அவர்களுடைய மூதாதைகளில் அவர்களுடைய குடும்பத்தில் யார் டாப் மோஸ்ட் அமல் செய்திருக் கிறார்களோ, அவர்களுடன் கொண்டு போய் கருணையில் அல்லாஹ் சேர்த்து விடுகிறான். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் எவ்வளவு பெரிய கருணையாளன்.
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَـقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُم
(அல்குர்ஆன் : 52:21)
அவர்களுடைய சந்ததியையும் அவர்களுடன் சேர்த்து விடுவோம்.
وَمَاۤ اَلَـتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَىْء
(அல்குர்ஆன் : 52:21)
இவர்களுக்கு இவ்வளவு தரஜா கூட்டி கொடு கொடுப்பதினால் அவர்களுடைய அமலை குறைத்து விட மாட்டோம். அவர் களுடைய தரஜாவை யாரு முன்னாடி சென்றார்கள் அல்லவா அவர்களுடைய தலஜாவை நாம் குறைத்து விட மாட்டோம். அவர் தரஜாவிலே இருப்பார். இவர்களை அவர்கிட்ட தூக்கிட்டு போய் விடுவோம். அதேபோல் அல் குர்ஆனில் இன்னொரு வசனம் பாருங்கள். சூரா அர்ரஜஹ் அல்லாஹ் சொல்கிறான்.
جَنّٰتُ عَدْنٍ يَّدْخُلُوْنَهَا
(அல்குர்ஆன் : 13:23)
சொர்க்கத்தைப் பற்றி சொல்லும் பொழுது அது ஒரு நிரந்தரமாக தங்கக்கூடிய அதனுடைய சொர்க்கங்கள். இந்த அமல் செய்யக்கூடியவர்கள் அங்கே நுழைவார்கள்.
وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآٮِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّيّٰتِهِمْ
(அல்குர்ஆன் : 13:23)
இப்படியும் அல்லாஹ் சொல்கிறான். எப்படி? சில நேரத்தில் பிள்ளைகள் அதிகமான அமல் செய்திருப்பார்கள். தந்தை குறைவான அமல் செய்திருப்பார். தன்னுடைய பிள்ளையை அல்லாஹ்வுடைய பாதையில் அனுப்பி விடுகிறார் அல்லது, மார்க்க கல்விக்காக அனுப்பி விடுகிறார் அல்லது, வேறு ஏதாவது அல்லாஹ்வுடைய மார்க்க பணிக்காக வேண்டி தன்னுடைய பிள்ளையை கொடுத்து விடுகிறார்.
இப்ப இந்த தந்தையோ, அவர் ஒரு சாதாரணமான பாமரராக இருக்கிறார். ஆனால் அவருடைய மகனார் எப்படி இருக்கிறார். அல்லாஹ்வுடைய தீனில் அல்லாஹ்விடத்தில் நெருக்கம் பெற்ற ஒருவராக இருக்கிறார். இப்ப என்ன ஆகும் அதையும் அல்லாஹ் சொல்கிறான்.
இப்போ அந்த தந்தை இடத்திலேயும் அது போன்று பிள்ளைகளிடத்திலேயும் இன்னும் பாருங்கள், மனைவிமார்கள் இந்த கணவனுடைய அமல் அளவுக்கு மனைவியிடத்தில் இல்லை என்றாலும் அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா, எல்லோரையும் அங்கு சொர்க்கத்தில் ஒன்று சேர்த்து விடுகிறான். இந்த இடத்தில் ஒரு சின்ன நிகழ்வு அதாவது அஸ்மா பின்த் அபூபக்கர்,
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு உடைய மகள், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா உடைய சகோதரி,தந்தை ஒன்று தாய் வேற. இவர்கள் யாருக்கு மனம் கூட முடித்துக் கொடுக்கப்பட்டிருந்தார்கள். ஜுபேர் ரலியல்லாஹு அன்ஹு சரியான கோபக்காரர், சரி கோபக்காரர், ஆளு சரியான பயங்கரமான பர்சனாலிட்டி குரேஷியினுடைய உயர்ந்த வம்சம் வேற, அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா தன்னுடைய தந்தை அபூபக்கர் இடத்தில் வந்து அத்தா என்னால தாங்க முடியல அத்தா, தன் தந்தையிடம் வந்து என்னால ஜுபேரிடம் வாழ முடியல அத்தா,
என்னை சில நேரத்தில் அடித்து விடுகிறார். சில நேரத்தில் திட்டி விடுகிறார். ரொம்ப கடினமான ஆளாக இருக்கிறார். இதில் என்னன்னு சொன்னா கோபக் காரர்னா அந்த அளவுக்கு பெர்ஃபெக்ட் அவர்கள். அவுங்களால இப்படினா இப்படித் தான் இப்படி அப்படின்னு இருக்க முடியாது. அப்போ தன்னுடைய அளவிற்கு அவர் யாரை எதிர்பார்க்கிறார்.
தன்னுடைய மனைவியை எதிர்பார்க்கிறார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி? அவர்கள் ரொம்ப மென்மையானவர்கள். அவர்கள் எழுந்திருச்சு தகஜத் தொழுவார்கள். நீ கொஞ்சம்தள்ளி படுத்துக்கோமா என்று சொல்லி விட்டு அவர்கள் தொழுவார்கள். சில பேர் என்ன செய்வார்கள், நான் தகஜத் தொழுதால் நீயும் எழுந்திருச்சு தஹஜத் தொழுதே ஆகணும். நான் ஒரு நாள் இத்தனை ஜுசு ஓதினால் நீயும் ஓதியே ஆகணும். அப்படி கிடையாது அல்லாஹ் ஒவ்வொருத்தர் ஒவ்வொருத் தருக்கு ஒவ்வொரு அமலை கொடுத்திருக்கிறான். ஒரு வேலையை கொடுத்திருக்கிறான். ஒரு உடல் வாகை கொடுத்திருக்கிறான். அதோடு அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பாருங்கள். கடைசி பத்து வந்துவிட்டால் தூங்கிட்டு இருக்கிறவர்களை எழுப்பி விட்றுவாங்க.
எப்போ எந்த இபாதத்துக்கு முக்கியத்துவம் தரணுமோ அதுக்கு தகுந்த மாதிரி, எல்லாவற்றிற்கும் ஒரே தரத்தில் வைத்து முக்கியத்துவத்தை கொடுத்து மாட்டிக்கிறோம். சிக்கலை உண்டாக்குகிறோம். அபூபக்கர் அலி அல்லாஹ் என்ன வார்த்தை தெரியுமா சொன்னார்கள். மகளே பொறுத்துக் கொள். நம்மலாம் இருந்தோம்னா உடனே பெட்டியை தூக்கிட்டு வந்துரு என்று சொல்லி விடுவோம்.
அபுபக்கர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள்: மகளே! பொறுத்துக் கொள், சகித்துக் கொள், ஏன் தெரியுமா? மனைவி இருக்கிறாளே, ஒரு நல்ல சாலிஹான கணவன் அவளுக்கு அமைந்து, ஸாலிஹான கணவனுடைய முரட்டு குணங்களை அவள் சகித்துக் கொண்டால்' அந்த சாலிஹான கணவனுக்கு மறுமையிலே அல்லாஹ் என்ன தரஜாவை கொடுப்பானோ, இந்த தரஜாவிலே இவளையும் அல்லாஹுத்தஆலா சேர்த்து விடுகிறான். ஜூபேர் இப்னு அவ்வாமுஹி இவர்கள் எந்த கேட்டகிரியில் உள்ள சஹாபி சொர்கத்தை குறித்து நற்செய்தி சொல்லபட்டவர்களில் ஒருவராவார்
وَالسّٰبِقُوْنَ وَالسّٰبِقُوْنَ
(அல்குர்ஆன் : 9:100)
சுபஹானல்லாஹ் நீ அந்த கேட்டகிரியில் போகணும்னா அல்லாஹ் கொண்டு போய் சேர்த்து விடுவான். நீ அவருக்கு மனைவியாக இருக்கிறதே போதும். அதோட பொருந்திக் கொண்டு போனவர்கள் தான் கடைசி வரைக்கும் நல்லபடியாக வாழ்ந்தார்கள். அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
அதினின் சொர்க்கங்கள். ஈமான் உடையவர்கள் எல்லாம் அதிலே நுழைவார்கள். முன்னோர்களில் உள்ள ஈமானுடையவர்கள். அவர்களுடைய மனைவிமார்கள்.
அவருடைய சந்ததிகள் அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா இப்படி மறுமையை நம்முடைய முஃமினான முன்னோர்களோடு சந்திக்கக்கூடிய ஒரு இல்லமாக நமக்கு ஆக்கி இருக்கிறான். அடுத்து வரக்கூடிய நம்முடைய முஃமின் சந்ததிகளை சந்திக்க கூடிய இடமாகவும் அல்லாஹ் ஆக்கியிருக்கிறான். இப்ப நாம் என்ன செய்ய வேண்டும்.
முதல் விஷயம் நம்முடைய நல்ல முன்னோர்களை நமக்கு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர்களுடைய அமலை நாம் தொடர வேண்டும். இரண்டாவது நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு ஈமானையும், இஸ்லாமையும் கற்றுக்கொடுத்து, அதிலே அவர்கள் உறுதியாக இருப்பதற்குரிய, அந்த தஃலீமை அந்தக் கல்வியை அவர்களுக்கு கொடுத்து நமக்கு பின்னால் இந்த தீனை பாதுகாக்க கூடிய நல்ல சந்ததிகளாக நாம் விட்டுச் செல்ல வேண்டும்.
அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா அப்படி நாம் செய்யும்போது, நமக்கு இந்த துன்யாவையும் பாதுகாத்து தருகிறான். ஆஹிறத்து அல்ஹம்துலில்லாஹ் வல் ஆகிறது ஹைறு வ அப்காபிஹிம் சிறந்ததாகவும் மிக உயர்ந்ததாகவும் அல்லாஹுத் தஆலா ஆக்கித் தருவான். சந்தோஷப்படுத்திவிடுவான்.
அல்லாஹ் சுபஹானல்லாஹுத்த ஆலா நம்மை நிறைவு படுத்தி விடுவான். எந்தக் குறையும் இல்லாமல் நம்முடைய கண் குளிர்ச்சி, மன மகிழ்ச்சி அடையக் கூடிய அளவிற்கு அல்லாஹ் சுபஹானல்லாஹுத்தஆலா அங்கே நமக்கு அவன் நிஃமத்து களை பரிபூரண படுத்துவான்.
அல்லாஹ் சுபஹானல்லாஹுத்த ஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த சொர்க்கத்திலே நிஃமத்தை தந்தருள்வானாக, நரகத்தில் இருந்தும், அல்லாஹ்வுடைய கோபத்தில் இருந்தும் என்னையும் உங்களையும் நம்முடைய முஃமினான நம்முடைய மூதாதைகளையும், நம்முடைய வருங்கால சந்ததிகளையும், அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக.
நமக்கும் நம்முடைய முஃமினான மூதாதையர்களுக்கும், நம்முடைய முஃமினான சந்ததிகளுக்கும் அல்லாஹ் சுபஹானல்லாஹுத்த ஆலா சொர்க்கத்தையும், அதனுடைய பொருத்தத்தையும் தந்தருள்வானாக, ஆமீன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காதுஹு
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
صحيح البخاري (1/ 90)
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي الْقِبْلَةِ فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ فَقَالَ إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلَاتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ فَلَا يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ فَبَصَقَ فِيهِ ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ فَقَالَ أَوْ يَفْعَلُ هَكَذَا
குறிப்பு 2)
صحيح البخاري (8/ 106)
حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ» قَالَتْ عَائِشَةُ أَوْ بَعْضُ أَزْوَاجِهِ: إِنَّا لَنَكْرَهُ المَوْتَ، قَالَ: «لَيْسَ ذَاكِ، وَلَكِنَّ المُؤْمِنَ إِذَا حَضَرَهُ المَوْتُ بُشِّرَ بِرِضْوَانِ اللَّهِ وَكَرَامَتِهِ، فَلَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ، فَأَحَبَّ لِقَاءَ اللَّهِ وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَإِنَّ الكَافِرَ إِذَا حُضِرَ بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَعُقُوبَتِهِ، فَلَيْسَ شَيْءٌ أَكْرَهَ إِلَيْهِ مِمَّا أَمَامَهُ، كَرِهَ لِقَاءَ اللَّهِ وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ» اخْتَصَرَهُ أَبُو دَاوُدَ، وَعَمْرٌو، عَنْ شُعْبَةَ، وَقَالَ سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، عَنْ سَعْدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
குறிப்பு 3)
صحيح مسلم (4/ 2182)
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ - وَاللَّفْظُ لِإِسْحَاقَ - قَالَا: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: قَالَ الثَّوْرِيُّ: فَحَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، أَنَّ الْأَغَرَّ، حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا " فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ}
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/